கண்களில் மண்ணைத்தூவி பூமியை நெருக்கமாக கடந்து சென்ற விண்கல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
10Shares

கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று விண்கல் ஒன்று பூமியை நெருக்கமாக கடந்து சென்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2020 VT4 எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல் ஆனது தென் பசுபிக் பகுதியிலிருந்து சுமார் 400 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் பயணித்துள்ளது.

இவ் விண்கல் ஆனது ஹவாயிலுள்ள Asteroid Terrestrial-impact Last Alert System (ATLAS) இல் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இவ் விண்கல் ஆனது 16 தொடக்கம் 32 அடிகள் விட்டத்தினைக் கொண்ட அளவுடையதாக காணப்பட்டுள்ளது.

மேலும் இவ் விண்கல் ஆனது பூமியைக் கடந்து செல்வதற்கு 20 மணி நேரத்திற்கு முன்னர் தான் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் வருடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி 2020 QG எனப் பெயரிடப்பட்ட விண்கல் ஆனது பூமியிலிருந்து 3,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்