நிலவு தொடர்பான ஆய்வில் நாசாவுடன் கைகோர்க்கவுள்ள புதிய நிறுவனம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

இத் திட்டமானது 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் மற்றுமொரு தனியார் நிறுவனம் ஒன்றினை நாசா இணைத்துக்கொள்ளவுள்ளது.

குறித்த நிறுவனம் எது என்பது தொடர்பான தகவல்களை அடுத்த வாரம் அளவில் நாசா வெளிவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை நாசா இவ் வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருந்தது.

எனவே இதுவரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பாக கலந்து ஆலோசனை செய்ய பின்னர் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்படவுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்