ஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பதார்த்தம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

PFAS (per and polyfluoroalkyl substances) என அழைக்கப்படும் இரசாயனப் பதார்த்தம் ஒன்று ஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை 'Forever Chemical' எனவும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இந்த இரசாயனப் பதார்த்தம் ஆனது பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் உணவு மற்றும் குடிநீர் என்பவற்றிலும் இந்த இரசாயனப் பதார்த்தங்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த இரசாயனப் பதார்த்தங்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்ற கருத்து தற்போதுவரையிலும் தர்க்க நிலையிலேயே காணப்படுகின்றது.

எவ்வாறெனினும் ஆர்ட்டிக் பகுதியில் சுமார் 29 வரையான PFAS இரசாயனப் பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்