சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறியலாம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

உடலில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறிய புதிய தொழில்நுட்பம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறை மூலம் புற்றுநோய் வகையை தரப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

சுவீடனில் உள்ள Karolinska Institute ஆராய்ச்சியாளர்களே இந்த நவீன முறையை கண்டுபிடித்துள்ளனர்.

சுரப்பிகளில் உண்டாகும் புற்றுநோய்களை கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக இதுவரை காலமும் மருத்துவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே இச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 6600 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு இம் முறைமை வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்