காபனீரொட்சைட்டினை உணவாகக் கொள்ளும் பக்டீரியாக்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இன்று உலக அளவில் வெப்பநிலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதற்கு பிரதான காரணமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிப்பு காணப்படுகின்றது.

எனவே இக் காபனீரொட்சைட்டின் அளவைக் குறைப்பதற்கு விஞ்ஞானிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று காபனீரொட்சைட்டினை மாத்திரம் உணவாக உட்கொள்ளக்கூடிய பக்டீரியாக்களை செயற்கையாக உருவாக்கியுள்ளனர்.

ஈகோலி வகை பக்டீரியாவில் மேற்கொள்ளப்பட்ட பரம்பரை அலகு மாற்றம் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.

மேலும் இவை காபனீரொட்சைட்டினை உள்ளெடுப்பதுடன் வெல்லத்தை (Sugar) வெளியேற்றக்கூடியன.

இவ்வாறு வெளியேற்றப்படும் வெல்லத்தினை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்