சூரிய குடும்பத்தில் இந்த கோளில் கால் வைத்தால் நீங்கள் நோயாளிதான்! சாவல் விடும் கிரகம்

Report Print Abisha in விஞ்ஞானம்

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான் என்று ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2035ஆம் ஆண்டளவில் செவ்வாயில் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு ஒரு மனித காலனியை நிறுவவும் அது திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கும் சூழல் வந்தால், அவர்களுக்கு படிபடியாக சுயநினைவை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மனநோய் பாதிக்ககூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்பவர் வரலாற்றில் இடம் பிடிப்பார் எனினும், முன்பு யாரும் எதிர் கொள்ளாத சுகாதாரப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள அபாயகரமான கதிர்வீச்சு புற்றுநோய், அறிவாற்றல் குறைப்பாடு, இருதய பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகள் வரலாம்.

இருப்பினும் கதிர்வீச்சுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குவதற்கான வழிகளில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், அதைத் தடுப்பதற்கான புதிய பொருட்கள், புதுமையான மருந்து அணுகுமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்