சூரிய ஒளிக்கு ஏற்றவாறு வளைந்துகொடுக்கக்கூடிய செயற்கை சூரியகாந்திப் பூவை உருவாக்கி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் என்பவற்றின் பொறியியலாளர்கள் இணைந்தே இதனை உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ள இச் சூரியகாந்திப் பூவானது சூரிய ஒளிக்கு மாத்திரமன்றி எந்தவொரு பிரகாசமான வெளிச்சத்தை நோக்கியும் திரும்பக்கூடியதாக இருக்கின்றது.
SunBOT எனப்படும் இச் செயற்கைப் பூவின் தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது சூரிய மின் உற்பத்தி, ஸ்மார்ட் விண்டோ, தானியங்கி ரோபோக்கள், விண்வெளி ஓடங்கள், சத்திரசிகிச்சைகள் போன்றனவற்றில் இத் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.