செவ்வாய் மற்றும் நிலவுக்கு செல்வதற்கான புதிய உடையயை அறிமுகம் செய்தது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்காவினை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நாசா விண்வெளி ஆய்வு மையமானது தற்போது புதிய விண்வெளி உடையினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் உடையானது செவ்வாய் கிரகம் மற்றும் நிலவிற்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விண்வெளி உடைகள் மிகவும் பாரமுடையதாகவே காணப்படும்.

ஆனால் இப் புதிய உடையானது இலகுவாக ஒரு இடத்திலிருந்து மற்றைய இடத்திற்கு பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக நாசா வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த புதிய உடையின் டெமோ வீடியோவினையும் வெளியிட்டுள்ளது.

இப் புதிய உடை அறிமுகமானது நாசா விண்வெளி ஆய்வு மையம் விரைவில் நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளமையை எதிர்வுகூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்