சர்வதேச விண்வெளி மையத்தினை நோக்கி ஐக்கிய அரபு எமிரேட்சின் முதல் விண்வெளி வீரர்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
55Shares

இரு தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் சோயூஸ் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இதில் மூன்று விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர்.

இவர்களில் ஒருவர் நாசாவினை சேர்ந்தவராகவும், மற்றையவர் ரஷ்ய விண்வெளி வீரராகவும் இருப்பதுடன் மூன்றாம் நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விசேட அம்சம் என்னவென்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் விண்வெளி பயணம் ஒன்றினை மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்படி Hazza Ali Almansoori என்பவர் முதல் விண்வெளி செல்லும் வீரராக பதிவாகியுள்ளார்.

இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படையில் விமானியாக இருந்துள்ளார்.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டிலிருந்து விண்வெளி வீரருக்கான பயிற்சிகளை பெற்றுவந்த நிலையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்