204 நாட்கள் விண்வெளியில்.. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்!

Report Print Kabilan in விஞ்ஞானம்

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

நாசாவைச் சேர்ந்த Anne McClain, ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான Roscosmosஐ சேர்ந்த கமாண்டர் Oleg Kononenko மற்றும் கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் David Saint-Jacques ஆகிய 3 பேரும், சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய சென்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் அங்கு 204 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த காலகட்டத்தில், 3 ஆயிரத்து 264 முறை பூமியை வலம் வந்தனர்.

அதாவது, சுமார் 86 லட்சத்து 430 மைல் தூரத்திற்கு பயணித்துள்ளனர். இந்நிலையில் விண்வெளி வீரர்கள் மூவரும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டின், ஷெஸ்கஸ்தான் பகுதியில் விண்வெளி வீரர்களான Anne McClain, Oleg Kononenko, David Saint-Jacques ஆகிய மூன்று பேரும் பத்திரமாக தரையிறங்கினர்.

NASA/Bill Ingalls
AFP
AP

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers