சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க விருப்பமா? இதோ நாசா தரும் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமிக்கு அப்பால் அண்டவெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றினை நாசா நிறுவியுள்ளமை தெரிந்ததே.

இவ் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளை அனுப்புவது தொடர்பில் புதிய தகவல் ஒன்றினை நாசா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2020 ஆண்டு முதல் இதனை சாத்தியப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதேவேளை நாசாவில் பணிபுரியாத ஏனைய தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறு பயணிக்க முடியும் எனவும், அவர்கள் அங்கு 30 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும் எனவும் நாசா அறிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்