சுருங்கும் சந்திரனின் மேற்பரப்பு! விஞ்ஞானிகள் தகவல்

Report Print Kabilan in விஞ்ஞானம்

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கடந்த 1969 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.

அதேபோல், சந்திரன் குறித்து தொடர்ந்து சர்வதேச விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது தெரிய வந்துள்ளது. அதனை வைத்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி சந்திரன் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஏற்படும் நில நடுக்கங்கள், நில அதிர்வுகளே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்திரனின் உட்பரப்பில் வெப்பமும், குளிரும் மாறி மாறி நிலவுகிறது. இதுவும் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருவதற்கு காரணம் என்றும் தாமஸ் வாட்டர்ஸ் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்