சந்திரனின் மிகவும் தூரமான பகுதிக்கு சீனா முதன் முறையாக தனது விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.
இந்த விண்வெளி ஓடம் சில வாரங்களுக்கு முன்னர் எதிர்பார்த்த இடத்தில் தரையிறங்கியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனது செயற்கைக்கோளினை பயன்படுத்தி சீனாவின் விண்கலம் சந்திரனில் காணப்படும் இடத்தினை படம் பிடித்துள்ளது.
கார் அளவிலான குறித்த விண்வெளி ஓடம் மிகவும் சிறியதாக குறித்த புகைப்படத்தில் தென்படுகின்றது.
குறித்த விண்கலம் அடுத்து வரும் 12 மாதங்களுக்கு சந்திரனில் தங்கியிருந்து தனது ஆராய்ச்சிகளை தொடரவுள்ளது.