வீட்டை சூழ காணப்படும் புற்றுநோய் மாசுக்களை அகற்ற புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஆட்கொல்லி நோயான புற்றுநோயை பூரணமாக குணப்படுத்துவதற்குரிய வழிமுறைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே இந்நோயால் பாதிக்கப்படாது இருப்பதற்கான முன் ஆயத்தங்கள் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று மற்றுமொரு சிறந்த பரிந்துரையை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன்படி வீடுகளில் பொதுவாக வளர்க்கப்படும் Pothos Ivy எனும் தாவரத்தில் பரம்பரை அலகு மாற்றங்களை செய்தால் அது வீட்டை சூழவுள்ள வளியில் காணப்படும் குளோரோபோம் மற்றும் பென்ஸீன் என்பவற்றினை அகற்றிவிடும் என தெரிவித்துள்ளனர்.

குளோரோபோம், பென்ஸீன் என்பன புற்றுநோய் தாக்கத்துடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் ஆகும்.

எனவே இவற்றினை அகற்றுவதால் புற்றுநோய் தாக்குவதிலிருந்து தப்பிப்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்த முடியும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers