உடுகோள் ஒன்றில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளி ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டுவரும் நாசா விண்வெளி ஆய்வு மையமானது கிரகங்கள், உடுக்கள் என அனைத்தையும் ஆய்வு செய்துவருகின்றது.

இவற்றுள் Bennu எனும் உடுக்கோளினையும் இந்நிறுவனம் ஆய்வு செய்துவருகின்றது.

இதற்காக Osiris-Rex எனும் விண்கலத்தினை அனுப்பி வைத்திருந்தது.

இவ் விண்கலமானது கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த உடுக்கோளில் தரையிறங்கியிருந்தது.

இவ்வாறு தரையிறங்கி ஒரு வாரத்திற்குள்ளேயே அவ் உடுக்கோளில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.

Osiris-Rex விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த திருசியக்காட்டியின் ஊடாக (Spectrometers) குறித்த ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ் ஆதாரத்தில் நீரில் காணப்படக்கூடிய மினரல்கள் அடங்கியிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers