செல்போன் மற்றும் செல்போன் கோபுரங்களால் பறவைகள் அழிகின்றனவா? ஆராய்ச்சியாளர்கள் கருத்து

Report Print Kabilan in விஞ்ஞானம்

செல்போன் பாதிப்பினால் பறவைகள் அழிவது உண்மையா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில், செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களினால் பறவைகள் அழிவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், உண்மையில் செல்போன்களால் பறவைகள் இனம் அழிகிறதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

மேலும் மனித உடலிலும், பிற உயிர்களையும் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உலகம் முழுவதும் எழுந்தன.

அதன் பின்னர் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கும், செல்போன் கோபுரங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகளில் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டது.

குறிப்பாக, இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலும், செல்போன் கோபுரங்கள் இருக்கும் இடங்களில் பறவைகளின் எண்ணிக்கை குறைவது உண்மை என்று தெரிய வந்தது.

அத்துடன் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், நாடுகள் கடந்து பறக்கும் பறவைகள் செல்போன் கோபுர கதிர்வீச்சால் திசை தெரியாமல் பயணித்து இறப்பதாகவும், இந்த செல்போன் கோபுரங்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகளும், தேனீக்களும் பெரிதளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேன் சேகரிக்க செல்லும் தேனீக்கள், கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதால், மீண்டும் தங்களது கூட்டுக்கு திரும்ப முடியாத சூழல் உருவாவதாகவும், இதனால் தேனீக்களின் கூட்டமாக வாழும் இயல்பு சிதைவதாகவும் ஆய்வில் தெரிய வந்தது.

இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பாக கூறுகையில், ‘செல்போன் கோபுர கதிர்வீச்சால் பறவைகளால் அதிக தொலைவு பறக்க முடியாது. பறவைகளின் திசையறியும் திறனும் குறைகிறது.

கூடுகள் உருவாக்கும் திறன் அழிகிறது. செல்போன் கோபுரங்கள் பறவை இனத்துக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் புற்றுநோய் முதலான நோய்களை உருவாக்கக் கூடியவை’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers