நீரிழிவு நோய்க்கு எதிராக போராடக்கூடிய பக்டீரியா கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இரண்டாம் வகை நீரிழிவு நோய் எனப்படும் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்தலுக்கு எதிராக போராடக்கூடிய பக்டீரியா ஒன்று காணப்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

முதன் முறையாக வயது முதிர்ந்த சுண்டெலியில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது இது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குடலில் காணப்படக்கூடிய Akkermansia muciniphila எனப்படும் குறித்த பக்டீரியாவானது இளம் சுண்டெலிகளிலும் காணப்படுகின்றபோதிலும் வயதான சுண்டெலிகளிலேயே இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு எதிராக வலிமையுடன் போராடும் நிலையை எட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதே நுட்பத்தினைப் பயன்படுத்தி மனிதர்களிலும் வயதான காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இக் கண்டுபிடிப்பு தொடர்பிலான கட்டுரை ஒன்று Science Translational Medicine எனும் பிரபல சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்