ஆண்கள் பருவமடைதலில் தாய்மார்களின் தாக்கம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

டென்மார்க் - அர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றில் ஆண்கள் பருவமடைவதற்கும், அவர்களின் தாய்மார்களுக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் பருவமடையும் வயதுக்கு முன்னராக பாலியல் முதிர்ச்சியைக் காட்டும் தாய்மார்களின் ஆண் பிள்ளைகள் உரிய காலத்திலும் 2 1/2 மாதங்களுக்கு முன்னராக அக்குள் முடிகளின் வளர்ச்சியைக் கொண்டிருப்பதும், 2 மாதங்களுக்கு முன்னதாக பருக்களின் வளர்ச்சி மற்றும் தொனி மாற்றங்களைக் காட்டுவதாகவும் மேற்படி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பெண்பிள்ளைகள் 6 மாதங்களுக்கு முன்னராகவே மார்பக வளர்ச்சியைக் காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இதற்கு முன்னர் ஆண்கள் பருவமடைதலுக்கும், தாய்மார்களுக்கும் தொடர்பிருப்பது பொதுவாக அறியப்பட்டிருந்தாலும் தற்போது இத் தரவுகள் மூலமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 16,000 தாய்மார்கள் மற்றும் பிள்ளைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் உலகளவில் பிள்ளைகள் பருவமடையும் வயது குறைவடைந்துவருவதாகவும், ஜக்கிய இராஜ்ஜியத்தில் தற்போது ஆண்கள் 12 வயதிலும், பெண்கள் 11 வயதிலும் பருவமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முக்கியமாக தற்போதைய கைத்தொழில் உலகில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் போசணை காரணம் காட்டப்பட்டாலும், சில ஆய்வுகள் உடல் பருமனுக்கும், வயதுக்கு முன்னரான பருவமடைதலுக்கும் தொடர்புள்ளதாக தெரியப்படுத்தியிருந்தன.

2015 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று வயதுக்கு முன்னரான அல்லது பிந்திய பருவமடைதலில் நீரிழிவுநோய், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இருதய நோய்கள் போன்றன அதிகம் தாக்கம் செலுத்துவதாக உறுதிப்படுத்தியிருந்தது.

பெண்களைப் பொறுத்தவரையில் வயதுக்கு முன்னரான பருவமடைதல் என்பது 8 தொடக்கம் 11 வயது வரையிலான காலப்பகுதி.

வயதுக்குப் பிந்திய பருவமடைதல் என்பது 15 தொடக்கம் 19 வயது வரையிலான காலப்பகுதி.

ஆண்களில் 9 தொடக்கம் 14 வயது வரையிலான காலப்பகுதி சாதாரண பருவமடையும் காலமாகக் கருதப்படுகிறது.

கடந்த ஜனவரியில் மேற்கொள்ளப்ட்டிருந்த மற்றுமொரு ஆய்வில் வயதுக்கு முந்திய பருவமடைதலானது பெண்களில் மனநிலை தொடர்பான பாதிப்புக்களை ஏற்படுத்துவது உறுதிப்படுத்தியிருந்தது.

இதிலிருந்து என்னதான் பருவமடைதலானது பிறப்புரிமைக்காரணி மற்றும் சூழல் காரணிகளில் தங்கியிருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் இது அதிகம் சூழல் காரணிகளைச் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்