புதிய வகை ஆணுறை உருவாக்கிய விஞ்ஞானிகள்: இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

லண்டனைச்சேர்ந்த விஞ்ஞானிகளால் தாமாகவே மசகிடக்கூடிய ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை பயன்படுத்தும்போது வழுக்கிச்செல்லக்கூடிய உணர்வைத் தரவல்லன.

இதனால் உராய்வால் உண்டாகும் வேதனை குறைக்கப்படுவதுடன், உடலுறவின்போது பூரண திருப்பியும் கிடைக்கிறது.

தற்போது பெரும்பாலும் பாவனையிலுள்ள "மரப்பால் ஆணுறைகள்" சிறந்த தடைப் பண்புகளைக் கொண்டிருப்பதுடன் அவை விலை குறைந்தவையாகவும், பயன்படுத்த எளிதானவையாகவும் இருப்பினும் அவற்றின் மேற்பரப்பு உராய்வு மிக அதிகம்.

இது உடலுறவின்போது பெரும்பாலான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.

உதாரணத்திற்கு, ஆணுறைகள் உடைதல் மற்றும் அசௌகரியம் ஏற்படுதலுக்கு காரணமாகிறது.

2008 இல் லண்டனில் மேற்கொள்ளப்பட்டிருந்த பகுப்பாய்வில், 70 வீதமான ஆண்களும், 40 வீதமான பெண்களும் தாம் ஆணுறைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக குறைந்களவிலான இன்பமும், அதிக அசௌகரியத்தையும் அனுபவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதற்கான முற்றான தீர்வு இதுவரையிலும் எட்டப்படாமலேயே இருந்துள்ளளது.

இவ்வகை ஆணுறைகளுடன் மசகிடும் திரவங்களை இணைத்துப் பயன்படுத்தியபோதும் கிடைத்த சந்தோசம் அதிக நேரம் நீடித்திருக்கவில்லை.

தற்போது இதற்கு மாற்றீடாக தாமாக மசகிடும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கென இறப்ர் பாலானது நீர்விருப்புள்ள மெல்லிய பல்பகுதியப் படையினால் உறையிடப்பட்டு இவ் ஆணுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப் பல்பகுதிய மூலக்கூறுகள் நீருடன் அதாவது ஈரமான மேற்பரப்புடன் தொடுகையுறும்போது கரையும் தகவடைந்து வழுக்கும் தன்மையுடையனவாக மாறுகின்றன.

இதனால் உடலுறவின்போது அதிக சந்தோசத்தையும், சௌகரியத்தையும் அளிக்கின்றன.

இதன் கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் இயல்பாகவே ஆணுறை பாவளையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்