செயற்கை முறையில் உணவுக் கால்வாயை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கையான முறையில் ஆய்வு கூடத்தில் உணவுக் கால்வாயினை உருவாக்கிய சாதனை படைத்துள்ளனர்.

Great Ormond Street Hospital (Gosh) மற்றும் Francis Crick Institute என்பவற்றில் பணியாற்றும் விஞ்ஞானிகளே இவ் உணவுக் கால்வாயை உருவாக்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த உணவுக் கால்வாயினை சுண்டெலிகளில் வெற்றிகரமாக பொருத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியும் உள்ளனர்.

உயிரினங்களில் காணப்படும் உணவுக் கால்வாய் ஆனது சிக்கல் தன்மை வாய்ந்த பல படைகளால் ஆன அங்கம் ஆகும்.

இதில் பல வகையான இழையங்கள் காணப்படுவதுடன் உணவு மற்றும் திரவங்களை வாயிலிருந்து வயிற்றை நோக்கி கொண்டு செல்லும் தொழிலை புரிகின்றது.

இதன் உருவாக்கமானது மருத்துவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

காரணம் பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தையானது உணவுக் கால்வாயில் குறையுடனயே பிறப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிப்பதற்கு இக் கண்டுபிடிப்பு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதனாலாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்