நாசாவின் அடுத்த தொலைகாட்டியும் செயலிழப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
84Shares

முன்னர் நாசாவின் ஹபிள் தொலைகாட்டி ஜைறோஸ்க்கோப் ஒன்று செலலிழந்து போனதன் காரணமாக அதன் செயற்பாடுகள் தடைப்பட்டு சேஃப் மூட்டில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த வியாழனன்று ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட்டின் பயண நடுவில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதிலிருந்த விண்வெளி வீரர்களான Alexey Ovchinin மற்றும் Nick Hague போன்றோர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டிருந்தனர்.

தற்போது Chandra X-ray ஆய்வகத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இது கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் சேஃப் மூட்டில் வைக்கப்பட்டிருப்பதாக நாஸா அண்மையில் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் இதுவரையில் நாசாவால் Chandra வில் நடந்த கோளாறை இனங்காண முடியவில்லை.

இதுவும் ஜைறோஸ்க்கோப்பில் ஏற்பட்டுள்ள பழுதாகவிருக்கலாம் என நாசா சந்தேகிக்கின்றது.

இது தொடர்பாக நாசா வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆய்வகத்தின் அனைத்துத் தொகுதிகளும் எதிர்பார்த்த தொழிற்பாட்டையே காட்டுகின்றன, அதன் விஞ்ஞான உபகரணங்களும் பாதுகாப்பாகத் தான் உள்ளன, இது சேஃப் மூட்டிற்குச் சென்றதற்கான காரணங்கள் தற்போது ஆராயப்பட்டுவருகின்றன, காரணம் அறியப்பட்டதும் மேலதிக தகவல்களை வழங்குவதாகத் தெருவித்துள்ளது.

மேற்படி ஆய்வகமானது ஜுலை 23, 1999 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்