ப்ராக்ஸிமா பி இல் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியப்பாடுகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
163Shares
163Shares
ibctamil.com

ஓகஸ்ட் 2016 அளவில் ஐரோப்பிய தெற்கு வானிலை ஆய்வுமையமானது ப்ராக்ஸிமா சென்சூரியைச் சுழ புவி மாதிரியான கோள் ஒரு உள்ளதென உறுதிப்படுத்தியிருந்தது.

ப்ராக்ஸிமா சென்சூரியானது நமது சூரிய குடும்பத்துக்கு அண்மையாகவுள்ள ஒரு நட்சத்திரம்.

ப்ராக்ஸிமா பி எனப்படும் மேற்படி கோளானது அந் நட்சத்திரத்தின் வசிக்கத்தக்க சாத்தியப்பாடுள்ள எல்லைக்குள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து உயிரின வாழக்கை தொடல்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதில் பல தக்க பயனைத் தந்திராவிட்டாலும், தற்போது நாசா மேற்கொண்டிருந்த ஆய்வில் உயிரின வாழ்க்கைக்கு ஆதாரம் கொடுக்கும் வகையில் இக் குறித்த கோள் தற்போதும் போதுமான அளவு நீரைக் கொண்டிருக்கக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு ஆய்வாளர்கள் தெருவிக்கையில் மேற்படி கோளானது ஆரம்பத்தில் அதற்கான நட்சத்திரத்திலிருந்து தொலைவாக உருவாகியிருக்கலாம் எனவும் பின்னர் படிப்படியாக நட்சத்திரத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதன்காரணமாக அது அதன் ஆரம்பக் கட்டங்களில் நட்சத்திரத்தின் தீங்கான விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என தெருவிக்கப்படுகிறது.

மேலும் இங்கு புவியில் உருவானதைப் போன்றும் 10 மடங்கான நீர் உருவாகியிருக்கலாம் என்றும், இதில் அதன் சூரியக் கதிர்வீச்சு விளைவு காரணமாக 90 வீதமான நீர் அகற்றப்படினும் மீதி 10 வீதம் உயிரின வாழ்க்கைக்கான சாத்தியப்பாட்டை வழங்கமுடியும் எனவும் நம்பப்படுகிறது.

அதேநேரம் இது ஆரம்ப காலத்தில் ஜதரசன் படையை கொண்டிருந்திருக்கலாம் எனவும் பின்னர் இது அகற்றப்பட்டு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலைகளைத் தோற்றுவித்திருக்கலாம் என்றும் தெருவிக்கப்படுகின்றது.

இச் சாத்தியப்பாடுகளை ஆராயவென ஆய்வாளர்கள் ROCKE -3D மென்பொருளைப் பயன்படுத்தி முப்பரிமாண உருவகப்படுத்தல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்