தனது 100 வது விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் ஜரோப்பாவின் ஏரியன் - 5

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஜரோப்பாவின் ஏரியன் - 5 ராக்கெட்டானது தனது 100வது விண்வெளி நடவடிக்கையை நிறைவுசெய்துள்ளது.

20 வருட வரலாற்றைக் கொண்ட இந்த ராக்கெட்டானது கடந்த செவ்வாயன்று இரு தொடர்பாடல் சாட்டலைட்டுக்களை அதன் ஒழுக்கில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.

ஏரியன் - 5 ஆனது 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த நாள் தொடங்கி இன்றுவரை தொடர்பாடல் செய்மதிகளை மட்டுமன்றி, சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சரக்கு வாகனங்களையும் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.

இது அதன் ஆரம்ப காலங்களில் பல தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், பின்னர் 2003 - 2017 காலப்பகுதிகளில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் 100 வீதம் வெற்றியை அளித்திருந்தது.

கடந்த ஜனவரியில் இது சில உள்ளீட்டு தவறுகள் காரணமாக அது தனது இலக்கிலிருந்து விலகிப் பயணித்திருந்தது.

ஆனால் தற்போதும் ஏரியன் - 5 ராக்கெட்டினால் இரு தொடர்பாடல் செய்மதிகளை அனுப்ப முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers