பிளாஸ்மா அலையினூடாக இலத்திரன்களை ஆர்முடுக்கி அசத்திய விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பிளாஸ்மா எனப்படுவது பௌதிகவியலுடன் தொடர்புடைய சொல் ஆகும்.

இது துணிக்கைகளையும், மின் மற்றும் காந்த புலங்களையும் ஒன்றிணைக்கும் அலை வடிவம் ஆகும்.

வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் இவ்வாறான பிளாஸ்மா அலையினூடு பயணிக்கும் புரோத்தன்களைப் பயன்படுத்தி இலத்திரன்களை ஆர்முடுக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது ஒரு மிகப்பெரிய விடயமாகும். காரணம், இது எதிர்காலத்தில் விலை குறைந்த, மிகச்சிறிய ஆர்முடுக்கிகளின் வருகைக்கு வழிவகுக்கலாம்.

தற்போது பாவனையிலுள்ள LHC (Large Hadron Collider) ஆர்முடுக்கியை நிர்மானிக்க கிட்டத்தட்ட 27 மைல் நீளமான கொங்கிரீட் சுரங்கம் தேவைப்படுகிறது.

ஆனால் இத் தொழில்நுட்பத்தில் வெறும் 33 அடி நீளமே போதுமானது.

ஜெனீவா ஆய்வாளர்கள் இதற்கென 5 வருடங்கள் உழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இது தொடர்பான மேலதிக ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்