உடுக்கோளினை ஆராய ரோபோக்களை தரையிறக்குகின்றது ஜப்பான்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ரைகு எனப்படும் உடுக்கோளை ஆராய்வதற்காக ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.

ஜப்பானின் Hayabusa-2 எனும் விண்வெளி ஓடமானது ஏறத்தாள முன்றரை வருட பயணத்தின் பின் கடந்த ஜுனில் ரைகு உடுக்கோளைச் சென்றடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் செப்ரெம்பர், ஒக்டோபரில் இவ் விண்வெளி ஓடத்திலிருந்து ரோபோக்களை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

இவ்வகை ரோபோக்கள் ரைகுவின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இதெல்லாம் வெற்றிகரமாக நடந்தால் Hayabusa-2 வே தகவல்களைப் பெறவென ரோபோக்கள் கொண்ட ஓடத்தினைத் தரையிறக்கும் முதல் விண்வெளி ஓடமாக இருக்கப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers