ஆர்ட்டிக் சமுத்திரத்தின் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே போகிறது.
இங்குள்ள மிகப் பழமையான, தடிப்பான கடல் பனிப் பாறைகள் உடையத் தொடங்கியுள்ளன.
நீரின் இரசாயன தன்மையில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றில் ஆட்டிக் கடலின் கீழாக சூடான நீர்ப்படையொன்று உருவாகி பரவி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது அதன் துருவப் பகுதியினை நோக்கி ஊடுருவி அங்குள்ள பனிக்கட்டிப் படுக்கைகளையும் உருகச் செய்வதாக சொல்லப்படுகிறது.
இங்கு வெப்பமான பகுதிகளில் காணப்படும் நீரின் வெப்பநிலை 1987 தொடக்கம் 2017 வரையிலான காலப்பகுதியில் இருமடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வாளர்கள் அச்சம் தெருவிக்கின்றனர்.
இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை Science Advances பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.