கோடை காலத்திலும் இதுவரை உருகாத பனித்திட்டு உருக ஆரம்பித்தது: அச்சத்தில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

முதன்முறையாக ஆர்ட்டிக் கடலின் மிகப் பழமைவாய்ந்ததும், தடிப்பானதுமான கடல் பனித் திடல் உடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதானிக்கப்படுவது இது முதலாவது தடவையல்ல. இவ் வருடம் மட்டும் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது.

கிரீன்லாந்தின் வட பகுதியில் இப் பனிக்கட்டித் திடல் உடைந்து நீரை வெளியேற்றியுள்ளது. இப் பகுதி பொதுவாக கோடை காலங்களிலும் உறை நிலையில் காணப்படுவது வழமை.

இச் செயற்பாடு பகுதியாக காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்ப அலைகள் மற்றும் வெதுவெதுப்பான காற்றுக்களால் உருவாகின்றது.

குறுகிய காலத் தாக்கங்களுக்கு மத்தியில் இது கடல் நாய்கள் மற்றும் துருவக் கரடிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

NASA விடமிருந்து பெறப்பட்ட செய்மதிப் புகைப்படம், அப் பனிக்கட்டித் திடல் உடையக்கூடியதாய், மற்றும் நரக் கூடியதாய் மாறியிருந்ததைக் காட்டியிருந்தது. அதேநேரம் இது கிரீன்லான்டின் வடக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கிக் காணப்பட்டது.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், ஆர்ட்டிக்கின் பெரும்பாலான பனித் திட்டுக்கள் பல வருட பனித் திட்டக்களாக இருந்தன. ஆனால் தற்போது அவை சுருங்கி தற்போது கிட்டத்தட்ட எல்லா திட்டுக்களும் முதல் வருட திட்டுக்களாகவே உள்ளன.

மேலும் பல வருட திட்டுக்கள் காணப்பட்டிருந்த வலயமாக கிரீன்லாந்தின் வடபகுதி காணப்பட்டிருந்தது. தற்போது அதுவும் கடற்கரையிலிருந்து நகரக் காணப்படுகின்றது என்கின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்