என்றுமில்லாதவாறு நாசா வெளியிட்டுள்ள சாட்டிலைட் புகைப்படம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாசா நிறுவனம் அவ்வப்போது படங்களாக வெளியிட்டு வருகின்றது.

இப் படங்கள் அனைத்தும் பூமிக்கு வெளியே காணப்படும் நாசாவின் சட்டிலைட்களில் இருந்து பெறப்படுகின்றன.

இவ்வாறு தற்போது பூமியில் எங்கெங்கு காட்டுத்தீ பரவியுள்ளது என காண்பிக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இக் காட்டுத் தீகள் அனைத்தும் விவசாய நிலங்களில் ஏற்பட்டவையாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.

அத்துடன் இவை கட்டுப்படுத்துவதற்கு சிரமமான காட்டுத்தீகளாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆபிரிக்கா பகுதியிலேயே உலகில் அதிகளவான காட்டுத்தீ காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாசாவின் வேர்ல்ட் வியூ அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி எவராலும் இப் புகைப்படத்தினை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்