சூரியன் மீதான நாஸாவின் ஆய்வு, Parker Solar Probe எவ்வாறு உருகாமல் சூரியனை அடையப் போகிறது?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இன்னும் சில வாரங்களே உள்ளன, நாஸா தனது கனவு செயற்திட்டங்களில் ஒன்றை செயற்படுத்த தயாராக உள்ளது.

Parker Solar Probe சூரியனை தாக்கப்போகிறது, சூரியனுடன் தொடுகையில் இருக்கப்போகிறது. முன்பு எப்போதுமில்லாதவாறு மிக நெருக்கமாக சூரியனை அண்மிக்கப்போகிறது.

Parker இனுடைய மூன்று அண்மித்த ஒழுக்குகளும் அதை சூரிய மேற்பரப்பிலிருந்து 6.1 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் வைத்திருக்கப்போகின்றது. இப்பகுதி வெப்பநிலை மில்லியன் டிகிறி கெல்பின்.

இவ் விண்கலம் வெப்ப கவசத்தை கொண்டிருக்கிறது. Parker இனை பாதுகாக்கும் தந்திரம் பற்றி நாஸா தெருவிக்கையில், அது வெப்பநிலை மற்றும் வெப்பத்துக்கிடையிலான வித்தியாசத்துடன் அண்டைவெளியின் அடர்த்தியுடன் தொடர்புபட்டது என்கிறார்கள்.

வெப்பநிலை என்பது துணிக்கைகள் எவ்வளவு வேகமாக அசைகின்றன என்பது. ஆனால் வெப்பம் என்பது அவை கடத்தும் சக்தியினளவு.

அண்டைவெளியில் துணிக்கைகள் வேகமாக அசைகின்றன. ஆனால் அவை அதிகளவு வெப்பத்தை கடத்துவதில்லை. காரணம் துணிக்கைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயிருப்பதாலாகும்.

சூரியனின் corona பகுதியினூடு Parker Solar Probe பயணிக்கிறது, அப்பகுதி வெப்பநிலை கூடிய பகுதி, அடர்த்தி குறைவு.

தற்போது நீங்கள் கைகளை கொதிக்கும் நீரில் விடுவதையும், சூட்டடுப்பில் (Hot Oven) விடுவதையும் கற்பனை செய்து பாருங்கள்.

சூட்டடுப்பில் கைகள் கொதிநீரிலும் பார்க்க நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை தங்களால் உணர முடிகிறதா?

இதேபோல் சூரியனின் கண்ணுக்குப் புலப்படக்கூடிய மேற்பரப்பை விட corona பகுதியின் அடர்த்தி குறைவு. எனவே விண்கலம் குறைந்தளவிலான துணிக்கைகளுடனேயே தொடுகையிலிருக்கும்.இதனால் அதிகளவிலான சக்தியை உள்வாங்கிக்கொள்ளாது.

அதாவது அதன் பாதுகாப்புக் கவசம் 1644 டிகிறி கெல்பின் அளவிற்கே வெப்பமாக்கப்படக்கூடியது. இக் கவசம் நன்கு வெப்பமாக்கப்பட்ட காபன்-காபன் கலப்பு தட்டுக்களாலானது.

சூரியனை நோக்கிய பகுதி வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் அது பெருமளவிலான ஒளிக்கதிர்களை தெறிக்க வைக்கிறது. இது தனக்கு அப்பாலுள்ள பொருட்களை 300 கெல்பினுக்கு குறைவாகப் பேணுகிறது.

மொத்த Probe உம் அமுக்கமாக்கப்பட்ட வடிகட்டிய நீர் கொண்டு குளிராக்கப்படுகிறது. இந் நீரானது Probe வெளிக்காட்டப்படும் வெப்பநிலைக்கு தாக்குப்பிடிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers