பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டிப் பாம்பு: ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஒருவகை குட்டிப் பாம்பு, Cretaceous காலத்தில் இறந்த பின் இவ்வுலகத்திலிருந்து ஒழிக்கப்பட்டிருந்த இனம் தற்போது 99 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் மியன்மார் மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிசின் கட்டியினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாம்பின் புதைபடிவம் மிகச் சிறியது. கிட்த்தட்ட 47.5 mm நீளமானது.

இவ் வகைப் பாம்பு Xiaophis myanmarensis எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தற்கால தென்கிழக்காசிய பாம்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி இது பிசின் புதை படிவமாக இருந்துள்ளமையால் தற்போது வரை சிதையாதுள்ளதாகவும், சாதரண புதைபடிவமாக இருந்திருந்தால் தற்போதளவில் நொருக்கப்பட்டு அடையல் பாறையாக மாறியிருக்கும் என்கின்றார்கள்.

கடந்த ஜீனில் இதே மியன்மாரில் சிறு தவளையின் புதைபடிவம் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்ததக்கது. மேலும் பச்சோந்தி, பறவைகள், எறும்பு மற்றும் சிறகுடைய டைனோசரின் வால் போன்றன மியன்மாரில் கிடைக்கப்பெற்ற பிசின் குமிழ்களிலிருந்து கண்டறியப்பட்டிருந்தன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்