செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
251Shares
251Shares
ibctamil.com

எதிர்வரும் 2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு புதிய ரோவர் விண்கலம் ஒன்றினை அனுப்பவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏற்கணவே தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது இவ் விண்கலத்துடன் இணைத்து ஹெலிகொப்டர் ஒன்றினையும் அனுப்பவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இக் ஹெலிகொப்டரானது 1.8 கிலோகிராம்கள் எடை கொண்டதாகவும், 3000rpm கொண்டதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கும் பணிகள் 2013ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சோலார் கலங்களும், லிதியம் அயன் மின்கலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் பூமியில் பரிசோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் இக் ஹெலிகொப்டர் 40,000 அடிகள் உயரத்திற்கு பறந்துள்ளது.

எனினும் செவ்வாய் கிரகத்தில் 100,000 அடிகள் உயரம் வரை பறக்கும் என நம்பப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்