நாசா-ஸ்பேஸ் எக்ஸ் இடையே உருவாகியுள்ள பிரச்சனை: விண்வெளி ஆராய்ச்சியில் தொய்வு?

Report Print Kabilan in விஞ்ஞானம்
98Shares
98Shares
ibctamil.com

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களான, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா ஆகியவற்றிற்கு இடையே தற்போது ராக்கெட் தொடர்பாக பிரச்சனை உருவாகியுள்ளது.

உலகின் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் Falcon Heavy ராக்கெட்டின் மூலம் டெஸ்லா காரை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து, நாசா நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் போட்டுள்ளது. அதன்படி, நாசாவின் விண்வெளி திட்டங்களுக்கு தேவையான ராக்கெட்டுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து, விண்ணில் செலுத்தும்.

இதனால், நாசாவின் ராக்கெட் தயாரிப்புகளை குறைத்துவிட்டு, விண்வெளி திட்டங்களில் கவனம் செலுத்தும். இந்நிலையில், ராக்கெட் எரிபொருள் தொடர்பாக புதிய திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் கொண்டு வர உள்ளது.

அதாவது, Falcon Heavy ராக்கெட்டில் திரவ எரிபொருளுக்கு மாற்றாக, அதனை மிக அதிக அளவில் குளிரூட்டப்பட்டு திட நிலைக்கு கொண்டு சென்று, பின்னர் பயன்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், ஒரு எரிபொருள் டேங்கில் மிக அதிக அளவில் எரிபொருள் நிரப்பப்படுவதோடு, ராக்கெட்டின் பறக்கும் நேரத்தையும் இது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், நாசா இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு செய்தால் அது ராக்கெட்டிற்கு பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று நாசா கூறுகிறது. மேலும், இதில் சிறு பிழை நேர்ந்தாலும் ராக்கெட் வெடிக்கும் அபாயம் உள்ளது என நாசா எச்சரிக்கிறது.

எனினும், ஸ்பேஸ் எக்ஸ் தனது முடிவில் உறுதியாக உள்ளது. இனி நாசா அனுப்பும் செயற்கைகோள்கள் மற்ற விண்வெளி திட்டங்கள் எல்லாவற்றிற்கும், இந்த வகையான ராக்கெட்டுகளை மட்டும் ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக இரண்டு விண்வெளி நிறுவனங்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகியுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் இதனால் எந்த மாற்றமும் செய்யப்பட போவதில்லை என தெரிய வந்துள்ளது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சில முக்கியமான தொழில்நுட்ப உதவிகளை நாசாவிற்கு செய்யாது என கூறப்படுகிறது.

SpaceX

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்