உயிர் கொல்லும் நச்சுக்களுடன் பூமியில் மோதவிருக்கும் சீன விண்வெளி நிலையம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
517Shares
517Shares
lankasrimarket.com

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் உயிர் கொல்லும் நச்சு அமிலங்களுடன் பூமியில் மோதவிருப்பால் விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விண்வெளி நிலையமானது இந்த வாரத்தில் ஒரு நாள் பூமியில் மோதும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Tiangong-1 என்ற சீனாவின் இந்த முதல் விண்வெளி நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. 8.5 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் தற்போது மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 9 திகதிக்குள் ஒரு நாள் பூமியில் மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பூமி நோக்கி விரையும் குறித்த விண்வெளி நிலையம் தொடர்பில் உலகெங்கிலும் இருந்து கண்காணித்துவரும் விஞ்ஞானிகள், ஐரோப்பிய கண்டம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒன்றில் இந்த விண்வெளி நிலையம் மோத வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றனர்.

மட்டுமின்றி பூமியை நெருங்கும்போது குறித்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் உடைந்து பூமியில் பதிக்கும்போது மட்டுமே அதன் தாக்கம் குறித்து உறுதியான கருத்துக்களை வெளியிட முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உறுதியாக எங்கே மோதும் என கணிக்க முடியாவிட்டாலும் அமெரிக்காவின் வடக்கு பகுதிகள், மத்திய இத்தாலி, ஸ்பெயின் நாட்டின் வடபகுதி, சீனாவின் வடபகுதி, ஐக்கிய அமீரக நாடுகள், தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் குறித்த விண்வெளி நிலையமானது மோத அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

வாரத்துக்கு 6 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த விண்வெளி நிலையத்தில் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் hydrazine என்ற உயிர் கொல்லும் அமிலம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

hydrazine அமிலமானது ராக்கெட்டுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

hydrazine என்பது நிறமற்ற ஒருவகை வழுவழுப்பான திராவகமாகும். இந்த திராவகத்தால் நேரிடையாக பாதிக்கப்பட்டால் கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கின்றனர். Tiangong-1 விண்வெளி நிலையமானது கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்