பூமியைப் போன்றே தோற்றமளிக்கும் வியாழன் கோள்: பரபரப்பை ஏற்படுத்தும் நாசாவின் புதிய படங்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

உயிரினங்கள் வாழக்கூடிய பல்வகை சூழலையும் கொண்ட பூமியானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய கோள்களை விடவும் வித்தியாசமான தோற்றத்திலேயே காணப்படுகின்றது.

எனினும் முதன் முறையாக வியாழன் கோள் ஆனது பூமியைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படங்களை நாசா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இப் புகைப்படங்கள் அனைத்தும் ஜுனோ விண்வெளி ஓடத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.

குறித்த புகைப்படங்களுக்கு Jovian 'Twilight Zone எனப் பெயரிட்டுள்ள நாசா இது ஒரு பரிசோதனை முயற்சி என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜுனோ விண்வெளி ஓடமானது பூமியிலிருந்து 2011ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டின் நடுப்பகுதியில் வியாழன் கிரகத்தில் திரையிறங்கியிருந்தது.

இவ் விண்வெளி ஓடனத்தினால் எடுக்கப்பட்டு ஏனைய சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்