பாதை மாறி சென்று கொண்டிருக்கும் உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட்

Report Print Harishan in விஞ்ஞானம்
735Shares
735Shares
ibctamil.com

அமெரிக்காவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் பாதை மாறி செல்வது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கேனவரலில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் என்பவர் தலைமையில் வடிவமைக்கப்பட்ட அந்த ஃபால்கன் ராக்கெட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான டெஸ்லா கார் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கெமரா மூலம் செவ்வாய் கிரகத்தில் நடப்பவற்றை நேரலையில் பார்க்க முடியும் என எலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

நாசா, இஸ்ரோ உள்ளிட்ட உலகின் தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செய்ய அஞ்சியதை தனியார் நிறுவனமான் ஸ்பேஸ் எக்ஸ் செய்து முடித்ததாக விஞ்ஞானிகள் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அதிக உந்து சக்தி நிரப்பப்பட்டதால் அந்த கார் சென்றடைய வேண்டிய இடத்தை கடந்து ஆஸ்டிராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டிருப்பதாக எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்