150 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாத இறுதியில் தோன்றும் அரிய சூப்ப்ர் ப்ளூ சந்திய கிரகணம்

Report Print Athavan in விஞ்ஞானம்

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’ ‘வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்த ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’ நிகழும் அன்று சந்திரன், பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்ட பாதையில் நிலை கொண்டிருக்கும். இதன் மூலம் வழக்கமான நிலவொளியை விட 14% கூடுதல் வெளிச்சத்தை நாம் காண முடியும்.

ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே முழு நிலவினைக் காண முடியும்,ஆனால் ஜனவரி 1ஆம் தேதியே தோன்றிய முழு நிலவு,மீண்டும் மாதக் கடைசியான 31ஆம் தேதி தோன்ற உள்ளது.

அதாவது பூமியின் நிழலில் சந்திரன் கடந்து போகும் நிகழ்வே, ‘சூப்பர் ப்ளூ மூன்’ சந்திர கிரகணம் எனப்படுகிறது.

கடந்த 1886ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் நிகழ்ந்த இந்த ‘ப்ளூ மூன்’ சந்திர கிரகணம் 150 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இம்மாதம் 31ஆம் தேதி நிகழவுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்