ஆண்களை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழும் பெண்கள்

Report Print Deepthi Deepthi in விஞ்ஞானம்
108Shares
108Shares
ibctamil.com

அமெரிக்காவின் துர்ஹமில் உள்ள டியூக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என தெரியவந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்- பெண் இறப்பினை அடிப்படையாக கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதில், ஆண்களை விட பெண்கள் 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் அதிக காலம் உயிர்வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

பெண்கள் மரபியல் ரீதியாகவும் சரி, உயிரியல் ரீதியாகவும் வலிமையாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே, ஆண்களை விடவும், பெண்களுக்கு கூடுதலான ஆயுட் காலம் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிறந்த குழந்தைகளில் கூட ஆண் குழந்தைகளை ஒப்பிட்டால், பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளன. ஆண்களை விடவும், பெண்களின் வாழ்நாள் அதிகரித்து இருக்க மரபியல் ரீதியான காரணங்களும், சுரபிகளும் கராணமாக இருக்கலாம்.

குறிப்பாக எஸ்ரோஜன் ஹார்மோன்கள், அவர்களுக்கு நோய் எதி்ப்பு சக்தியை அதிகமாக வழங்குகிறது. எனவே அவர்கள் தொற்றுநோய் உள்ளிட்டவை பரவும் போது அதை எதிர்கொள்ளும் திறன் அவர்களின் உடலுக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்