77 நிமிடங்கள் நீடிக்கும் ப்ளூ மூன் கிரகணத்தால் ஆபத்தா? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
263Shares
263Shares
ibctamil.com

நீண்ட 150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் திகதி தோன்றவுள்ளது.

இந்த சந்திர கிரகணமானது மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி தோன்றியதாக கூறும் விஞ்ஞானிகள், இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்