புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவு முறைமை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை கண்டறிய முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு முறைமையினை உருவாக்கியுள்ளனர்.

இதன் ஊடாக சுவாசப்பை புற்றுநோய் உட்பட இதய நோய்களையும் முன்னரை விட துல்லியமாக கண்டறியக்கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Ultromics எனப்படும் இம் முறைமையின் ஊடாக 1,000 வரையான நோயாளிகள் பரீட்சிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் இம் முறைமையின் ஊடாக எதிர்காலத்தில் ஏதாவது அசௌகரியங்கள் உண்டாகுமா என்பதற்கு வைத்தியர்களால் இதுவரை பதில் தர முடியவில்லை.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்