புத்தாண்டில் இந்த நாடுகள் கடும் பேரழிவை சந்திக்கும்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
1928Shares

அடுத்த ஆண்டில் எரிமலை சீற்றத்தால் ஜப்பான், அமெரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் சில பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் சீற்றம் கொண்ட எரிமலையை அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறிய நிலையில்,

அடுத்த புத்தாண்டில் எரிமலை சீற்றத்தால் பேரழிவை சந்திக்கவுள்ள நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் கணித்து வெளியிட்டுள்ளனர்.

அதில் முதலிடத்தில் ஜப்பான் உள்ளது. இங்குள்ள கிரிஷிமா எரிமலையானது 742 ஆம் ஆண்டில் இருந்தே மிகவும் ஆபத்தான வகையில் பட்டியலிட்டுள்ளனர்.

இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலையானது, அதுவரையான 50 ஆண்டு காலத்தில் எரிமலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் இது குறிப்பிடும்படியாக அமைந்தது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த இடத்தில் இந்தோனேசியாவின் Merapi எரிமலை. அந்த நாட்டில் உள்ள மிகவும் ஆபத்தான எரிமலைகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.

கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர். 21 ஆம் நூற்றாண்டில் இதுவே மிக கொடூரமான எரிமலைச் சீற்றம் எனவும் கூறப்படுகிற்து.

ஐஸ்லாந்தின் Öræfajökull எரிமலை மிகவும் ஆபத்தான பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த 1362 ஆம் ஆண்டும் 1727 மற்றும் 28 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சீற்றத்திற்கு காரணம் அங்கு ஏற்பட்ட பெருவெள்ளம் என கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் எரிமலை வீற்றிருக்கும் பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுவருவது விஞ்ஞானிகளை கவலை கொள்ள வைத்துள்ளது.

மெக்சிகோவின் Popocatépetl, சிலியின் Villarrica மற்றும் அமெரிக்காவின் Kilauea ஆகிய எரிமலைகள் மிக ஆபத்தான பேரழிவை தரக்கூடிய எரிமலைகள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்