விண்வெளியை இலக்கு வைத்து ரஷ்யாவின் புதிய கனவு: சாத்தியமாகுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்காவை மையமாகக் கொண்டு பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாப் பயணம் தொடர்பில் பணியாற்றி வருகின்றன.

விரைவில் சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான Roscosmos திட்டம் தீட்டியுள்ளது.

இத் திட்டத்தின் அடிப்படையில் குறித்த ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி விண்வெளி அனுபவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்வதற்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர்களும் செலுத்த வேண்டும்.

இத் திட்டத்தின் அடிப்படையில் ரஷ்யாவின் விண்வெளி ஒப்பந்ததாரர் ஆன RKK Energia நிறுவனம் ஹோட்டலின் இரண்டாவது தொகுதியினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக சுமார் 446 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் முதலாவது தொகுதியை உருவாக்குவதற்கான செலவினை முழுமையாக ரஷ்ய அரசு செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்