வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டைனோசர் தடயத்திற்கு நேர்ந்த கொடுமை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

உலகின் வெவ்வேறு பாகங்களிலும் டைனோசர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் குறித்த தடயங்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சிக்காக பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அவுஸ்திரேலியாவில் காணப்பட்ட டைனோசர் ஒன்றின் கால் தட அடையாளம் வேண்டுமென்று அழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2006ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த அடையாளம் 3 விரல்களைக் காண்ட பாதத்தின் அடையாளமாக காணப்படுகின்றது.

இந்த அடையாளம் 115 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரினுடையது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுற்றுலாச் சென்ற பாடசாலை மாணவர் குழு ஒன்றே இதன் மீது சித்திரங்களை வரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த அடையாளத்தினை அடிப்படையாகக் கொண்டு மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்