உலக சாதனையில் இடம்பிடிக்கவுள்ள அவகாடோ

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
164Shares

உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை தரவுள்ள அவகாடோ பழம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இவற்றின் சாதாரண அளவானது ஒரு டென்னிஸ் பந்தினை விடவும் சற்று பெரிதாக காணப்படும்.

எனினும் அபூர்வமாக இந்த அளவினை விடவும் பெரிய அளவுடைய அவகாடோ பழம் ஒன்று ஹவாயில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதன் எடையானது 2.37 கிலோ கிராம்களாக காணப்படுகின்றது.

அத்துடன் சாதாரண அளவினை விடவும் மூன்று மடங்கு அதிக பருமன் உடையதாகவும் இருக்கின்றது.

இதனை கின்னஸ் சாதனைப் பதிவேட்டில் இடம்பெற வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை இதற்கு முன்னர் 2009ம் ஆண்டில் 1.8 கிலோ கிராம்கள் எடைகொண்ட அவகாடோ பழம் அறுவடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்