இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனையில் வெற்றி

Report Print Gokulan Gokulan in விஞ்ஞானம்
136Shares

இந்தியாவின் ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக வானில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டிலேயே இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால்(DRDO) வடிவமைக்கப்பட்ட ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை, வெற்றிகரமாக வானில் செலுத்தி சோதனையிடப்பட்டது.

ஒடிசா மாநிலம் பலசோர் பகுதியில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து நேற்று(5-12-2017) ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.

தரையிலிருந்து செலுத்தப்பட்டால் வான் வரை சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை, இந்த சோதனையில் ஆளில்லாத குட்டி விமானத்தை இலக்காக வைத்து செலுத்தப்பட்டது.

குட்டி விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கிய ஆகாஷ் ஏவுகணையின் சோதனையின்போது இந்திய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி உடனிருந்து திட்டத்தின் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று, பல்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, வானில் 25 கி.மீ தூரம் வரை சென்று 55 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை வைத்து தாக்கும் திறனுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.


மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்