2018ல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் எவரும் எதிர்பாராத வகையில் அடுத்த வருடம் மிகப்பெரிய அனர்த்தங்கள் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உலகின் வெவ்வேறு பாகங்களிலும் சுமார் 20 வகையான பாரிய நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் பில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பூமி சுற்றும் வேகமானது குறைந்து வருவதை அவதானித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையில் குறைவு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

இவ் ஈர்ப்பு விசையின் மாற்றத்தினால் பூமியில் நிலநடுக்கங்கள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Colorado பல்கலைக்கழகம் மற்றும் Montana பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்