தொடர் நிலநடுக்கங்கள் உணர்த்தும் எச்சரிக்கை: வெளியான ஆய்வறிக்கை

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
723Shares
723Shares
ibctamil.com

தொடர் நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றம் உள்ளிட்டவை உலக அழிவு நெருங்கி விட்டதையும் அடுத்த 24 மணி நேரத்தில் அதன் அறிகுறிகள் தோன்றும் எனவும் இரகசிய கோட்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Conspiracy theorists எனப்படும் குறித்த அமைப்பினர் மீண்டும் நிபிரு கிரகம் குறித்தும், உலகின் பல்வேறு நாடுகளில் சமீப காலமாக தோன்றும் நிலநடுக்கத்தையும் உலக அழிவின் துவக்கமாக முடிச்சு போட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அடுத்த 24 மணி நேரத்தில் உலகில் மிக துயரமான ஒரு சம்பவம் நிகழும் எனவும், அது உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நிபிரு கிரகம் குறித்து இதுவரை உறுதியான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாத நிலையில் Conspiracy theorists அமைப்பினர் மட்டும் உறுதியாக நம்பி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நிபிரு கிரகம் பூமியில் மோதவிருப்பதாக இவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

தற்போது கடந்த சில வாரங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதை, நிபிரு பூமியை நெருங்கி விட்டதை உணர்த்துவதாக குறிப்பிட்டு மீண்டும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

உலகளாவிய நிலநடுக்கம் என்பது நவம்பர் மாத இறுதி தொடங்கி டிசம்பர் மாத இறுதி வரை உச்சத்தில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பல்வேறு நாடுகள் இதனால் கடும் விளைவினை எதிர்கொள்ள இருக்கிறது எனவும் எழுத்தாளர் Terral Croft தெரிவித்துள்ளார்.

நிபிரு கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணமாகவே தொடர் நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் உள்ளிட்டவை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்