செவ்வாய் கிரகத்தில் பயிர்: ஐக்கிய அரவு எமிரேட்ஸின் திட்டம் இதுதான்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சில மாதங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விருப்பம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் எவ்வகையான பயிர்களை அங்கு பயிரிடுவதற்கு அந்நாடு விரும்புகின்றது என்பது தொடர்பிலான புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பேரீந்து மற்றும் ஸ்டோபெரி ஆகியவற்றினையே பயிரிடுவதற்கு விரும்புகின்றது.

செவ்வாய் கிரகத்தின் சுற்று சூழலும் பாலைவனத்தின் சுற்று சூழலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருப்பதனால் பாலைவன தாவரங்கள் செவ்வாய் கிரகத்தில் வளர வாய்ப்புள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி நிறுவனத்தில் பணியாற்றும் ராஸிட் அல் சாதி என்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்