கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அனைவருக்கும் மோசமான ஆண்டாக 2017: ஆய்வில் தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
84Shares
84Shares
ibctamil.com

ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது தமது வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாதா என்ற ஆவல் அனைவரிடமும் காணப்படும்.

ஆனால் சில சமயங்களில் பலருக்கு ஏமாற்றமன ஆண்டாக அமைந்துவிடுவதும் உண்டு. அதேபோலவே கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017ம் ஆண்டானது மோசமான ஆண்டாக இருப்பது ஆய்வினூடாக தெரியவந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் இடம்பெற்று வரும் இவ் ஆய்வில் நடுத்த வசதி படைத்த மக்களிடம் சில கேள்விகள் தொடுக்கப்படும்.

அவர்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த ஆண்டு பற்றிய தகவல் வெளியிடப்படும்.

அதேபோலவே இவ் வருடமும் சுமார் 100,000 வரையானவர்களிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் 0 தொடக்கம் 100 வரையான மதிப்பு சுட்டெண் வழங்கப்படும்.

இந்த சுட்டெண் ஆனது குறித்த வருடம் தமக்கு சிறந்த ஆண்டாக இருக்கின்றது என எத்தனை சதவீதமான மக்கள் கருகின்றனர் என்பதை கணிக்க உதவும். 2014ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்ட வரை இச் சுட்டெண் 61.6 இலிருந்து 62.1 ஆக மெதுவாக அதிகரித்து வந்திருந்தது.

ஆனால் இவ் வருடம் மீண்டும் 61.5 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 2008ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட வீழ்ச்சியில் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்