உலகின் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சிக் குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
997Shares
997Shares
ibctamil.com

உயர்கொல்லி நோயான புற்றுநோய் தொடர்பில் பல்வேறு நாடுகளின் வெவ்வேறு குழுக்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இக் குழுக்களில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்று புதிய தவலை வெளியிட்டுள்ளது.

அதாவது இதுவரை காலமும் புகைத்தலும் புற்றுநோய் ஊக்கியாக இருக்கின்றது என தெரிவித்து வந்த நிலையில் சிறிதளவில் மதுபானத்தினை தொடர்ச்சியாக அருந்துதலும் ஆபத்து என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி நவீன மதுபானங்களை சிறிய அளவிலோ அல்லது அதிக அளவிலோ அருந்துவதனால் புற்றுநோய் தாக்கம் உக்கிரமடையும்.

மேலும் கழுத்து, தலை, மார்பு, பெருங்குடல் மற்றும் உணவுக்கால்வாய் என்பவற்றில் புற்றுநோய் தாக்கம் அதிகமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை American Society of Clinical Oncology (ASCO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்காவில் ஆண்டுதோறும் 95,000 நபர்கள் புற்றுநோயால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்