அந்தாட்டிக்காவின் பனிப்பாறைகளை உருகச் செய்யும் இராட்சத வெப்ப மூலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூகோளத்தின் வெப்பநிலை அதிகரிப்பிற்கு பனிப்பாறைகள் உருகுவதும் ஒரு காரணம் என்பது தெரிந்ததே.

பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித நடவடிக்கைகளும் ஒரு காரணமாகக் காட்டப்பட்ட போதிலும் இயற்கையின் சீற்றமும் ஒரு காரணமாக விளங்குகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக புதிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அதாவது அந்தாட்டிக்காவின் Marie Byrd Land பகுதியில் காணப்படும் பனிப்பாறைகளை இராட்சத வெப்ப மூலம் ஒன்று உருகச் செய்வதற்கான வலுவான ஆதாரத்தினை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

இந்த மூலமானது பனிப்பாறைகளை ஆழமான பகுதியில் இருந்தே உருகச் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிமலைக் குழம்பின் மோசமான செயற்பாடே அந்தாட்டிக்கா பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருக காரணம் என 30 வருடங்களுக்கு முன்னர் Colorado பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருந்தார்.

தற்போது இவரின் கொள்கை சரியானது என நாசாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்